பேனர்களால் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் - வாகன ஓட்டிகள் அச்சம்

பாபநாசம், ஜன. 11: பாபநாசத்தில் உள்ள கும்பகோணம்- தஞ்சாவூர் மெயின் சாலை தமிழகத்தில் உள்ள முக்கியமான சாலைகளுள் ஒன்றாகும். எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் தினம்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையில் போக்குவரத்துக்கு இடையூராக கடைகளை மறைத்து அரசியல் கட்சியினர், அமைப்பினர், ரசிகர் மன்றத்தினர் விளம்பர பேனர்களை வைத்துள்ளனர். இதனால் விபத்துகள் நேர்வதுடன், வியாபாரம் பாதிக்கப்படுவதாக வணிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து பாபநாசம் வணிகர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், நாங்கள் பாபநாசம் டிஎஸ்பி மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளோம். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. நெடுஞ்சாலைகளில் பிளக்ஸ் வைக்க தடை விதித்திருந்தும் பின்பற்றுவதில்லை. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்க முடிவு செய்துள்ளோம்.

× RELATED ராமச்சந்திராபுரம் ஊராட்சியில்...