திருவையாறில் மார்கழி இசை விழா துவக்கம்

திருவையாறு, ஜன. 11: திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் கலை பண்பாட்டுத்துறை தஞ்சை மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பில் மார்கழி இசை விழா நேற்று மாலை துவங்கியது.அரசு இசைக்கல்லூரி முதல்வர் உமாமகேஸ்வரி வரவேற்றார். விழாவை கலை பண்பாட்டுத்துறை இணை இயக்குனர் குணசேகரன் துவக்கி வைத்தார். அதைதொடர்ந்து மாலை 6 மணிக்கு கரூர் சுவாமிநாதன் குழுவினரின் திருமுறை இசை, இரவு 7 மணிக்கு இசைப்பேரொளி சவுமியா குழுவினரின் தமிழிசை நிகழ்ச்சி 8 மணிக்கு சென்னை பரத் சுந்தர் குழுவினரின் தமிழிசை நிகழ்ச்சி, 9 மணிக்கு திண்டுக்கல் நாதலய நாட்டியாலயா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.இன்று மாலை 5 மணிக்கு கலைமாமணி திருத்தணி சுவாமிநாதன் குழுவினரின் திருமுறை இசை, 6 மணிக்கு கோவிலடி மத்வபிரசாத் குழுவினரின் தமிழிசை நிகழ்ச்சி, 7 மணிக்கு கல்யாணபுரம் சீனிவாசன், திருராமேஸ்வரம் ராதாகிருஷ்ணன் குழுவினரின் இசைச்சங்கமம், 8 மணிக்கு திருவையாறு ஆடல் வல்லான் நாட்டிய பள்ளியினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது.

× RELATED திருவையாறு அரசு இசைக்கல்லூரியில் உலக இசை தினவிழா