தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு மர்மநபர்களுக்கு வலைவீச்சு

தஞ்ைச, ஜன. 11: தஞ்சை அருகே பந்தல் அமைக்கும் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சை வடக்குவாசல் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (40). பந்தல் அமைக்கும் தொழிலாளி. இவர் நேற்று இரவு வடக்குவாசல் சிரேஸ் சத்திரம் சாலையில் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த மர்மநபர்கள், அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடிவிட்டனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அப்பகுதியினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவல் அறிந்ததும் தஞ்சை மேற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று செந்திலை வெட்டியது யார், முன்விரோதம் காரணமா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

× RELATED வெளிநாட்டு வேலை மோசடி வாலிபர் கைது