வாங்கிய கடனை திருப்பி தருவதாக பெண்ணை அழைத்து பலாத்காரம் - 4 பேர் கைது

பாபநாசம், ஜன. 11: தஞ்சை  மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கோபுராஜபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (32).  இவர் கோவிந்தக்குடியை சேர்ந்த ஒருவரிடம் கடன்  வாங்கியிருந்தார். இந்த பணத்தை கடன் கொடுத்தவரின் மனைவி, வெங்டேசனிடம்  அடிக்கடி கேட்டு வந்தார். இந்நிலையில் கடனை திருப்பி தருவதாக கூறி  வெங்கடேசன், அந்த பெண்ணை நேற்று முன்தினம் இரவு தனியாக ஒரு இடத்துக்கு  அழைத்தார். கடன் கொடுத்தவரின் மனைவியும், வெங்கடேசன் அழைத்த இடத்துக்கு  சென்றார். அங்கு அந்த பெண்ைண வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர்கள்  சுந்தரபெருமாள்கோவிலை சேர்ந்த ஜெகன் (19), கோட்டைச்சேரியை சேர்ந்த கார்த்தி  (20) ஆகியோர் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த பெண்ணை மிரட்டி அவர்  அணிந்திருந்த 5 பவுன் செயினையும் பறித்து கொண்டதாக தெரிகிறது.இதுகுறித்து பாபநாசம்  போலீசார் வழக்குப்பதிந்து வெங்கடேசன், ஜெகன், கார்த்தி மற்றும் இவர்களுக்கு  உடந்தையாக இருந்த கோட்டைச்சேரியை சேர்ந்த ஐயப்பன் ஆகிய 4 பேரையும் கைது  செய்தனர்.

× RELATED பல லட்சம் ேமாசடி இளம்பெண் கைது