பாரபட்சமின்றி நிவாரணம் வழங்ககோரி பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்

பட்டுக்கோட்டை, ஜன. 11: கஜா புயலால் பாதித்த பொதுமக்களுக்கு பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க வலியுறுத்தி பட்டுக்கோட்டையில் அறந்தாங்கிரோடு முக்கத்தில் தமிழ்த் தேசிய கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்த் தேசிய கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் தங்கசந்திரபோஸ் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பு செயலாளர் காசிநாதன், ஒன்றிய செயலாளர்கள் சபாபதி, கணேசன், கருணாநிதி, ஒன்றிய தலைவர் சிவராமன் முன்னிலை வகித்தனர். பொது செயலாளர் அப்பாக்கண்ணு தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் அருண்குமார் வரவேற்றார். தமிழ் தேசிய கட்சி மாநில தலைவர் தமிழ்நேசன், பொது செயலாளர் முல்லைநாதன், தலைமை நிலைய செயலாளர் முனியாண்டி கண்டன உரையாற்றினர். மாவட்ட தலைவர் விஜயகுமார் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்துக்கு பின் தமிழ்த் தேசிய கட்சியின் மாநில தலைவர் தமிழ்நேசன் கூறியதாவது: கஜா புயல் கணக்கெடுப்பை வருவாய்த்துறை அதிகாரிகள் சரியாக நடத்தவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை வருவாய்த்துறை வஞ்சிக்கிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க வேண்டும். உரிய முறையில் நிவாரணம் வழங்காத மாவட்ட நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.

× RELATED டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து...