மணல் அள்ளிய 3 மாட்டு வண்டி பறிமுதல்

பாபநாசம், ஜன. 11: பாபநாசம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே  டிஎஸ்பி நந்தகுமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது  கணபதி அக்ரஹாரம் கொள்ளிடம் ஆற்றின் கரையில் சென்றபோது அவ்வழியாக வந்த  மாட்டு வண்டிகளை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது மாட்டு வண்டியை இயக்கி  வந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இதையடுத்து போலீசார் விரட்டி சென்று  ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் மாட்டு வண்டியில் அனுமதியின்றி மணல்  அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 மாட்டு வண்டிகளை பறிமுதல்  செய்ததுடன் தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்.

× RELATED மணலை திருடு... மாமூலை வெட்டு