கோர்ட் உத்தரவை மதிக்காத ஆசிரியருக்கு 1 மாதம் சிறை

துறையூர், ஜன.11: துறையூரில் நீதிமன்ற உத்தரவை மதிக்காத ஆசிரியருக்கு 1 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.துறையூரை அடுத்த உப்பிலியபுரத்தை சேர்ந்தவர்  உமாமகேஸ்வரி 44). இவருக்கும், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த ஆசிரியராக பணிபுரியும் ரவி என்பவருக்கும் திருமணமாகி 7 வயதில்  மகாலட்சுமிஎன்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்   துறையூர் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடரப்பட்டு 5 ஆண்டுகளுக்கு முன்பு  உமாமகேஸ்வரிக்கு ஜீவனாம்சம் வழங்க கோர்ட்  உத்தரவிட்டது. ஜீவனாம்சம் தராததால் உமாமகேஸ்வரி மீண்டும் வழக்கு தொடர்ந்தார்.  இதில் இடைக்காலமாக ரூ.2லட்சம் நீதிமன்றத்தில் கட்டும்படிகோர்ட் உத்தரவிட்டும் ஆசிரியர் ரவி கட்டவில்லை. அதையடுத்து நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக ரவிக்கு1மாதம் சிறைதண்டனை வழங்கி துறையூர் குற்றவியல் நீதிபதி வடிவேல் உத்தரவிட்டார். அதையடுத்து ரவி சிறையில்அடைக்கப்பட்டார்.

Advertising
Advertising

Related Stories: