சரிந்து கிடக்கும் வழிகாட்டி பலகை வாகன ஓட்டிகள் அவதி

திருவெறும்பூர், ஜன. 11: திருவெறும்பூரில் இருந்து சூரியூர் மற்றும் காந்தலூர் செல்லும் வழியை காட்டும் ஊர் பெயர்பலகை கிழே விழுந்து கிடப்பதால் புதிதாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதி அடைந்து வருகின்றனர்.

திருவெறும்பூரில் இருந்து சூரியூர் செல்லும் சாலையில் காந்தலூர் பிரிந்து செல்லும் இடத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் திருவெறும்பூர் சூரியூர் மற்றும் காந்தலூர் செல்லும் வழிகளை குறிக்கும் வகையில் பெயர் பலகை நடப்பட்டிருந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள ஊர்களுக்கு புதிதாக வரும் வாகன ஒட்டி களுக்கும், பொதுமக்களுக்கும் உதவியாக இருந்து வந்தது. இந்நிலையில் அந்த ஊர்பெயர் பலகை கம்பம் கீழே விழுந்து பல மாதங்கள் ஆகிறது. ஆனால் பெயர் பலகையை மாநில நெடுஞ்சாலைத்துறையினரோ, அந்தப் பகுதியை சேர்ந்த ஊர்காரர் களோ யாரும் தற்போது வரை நட்டு வைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அந்தப் பகுதியில் உள்ள ஊர்களுக்கு புதிதாக வரும் வாகன ஒட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கீழே விழுந்து கிடக்கும் ஊர்பெயர் பலகை கம்பத்தை நட்டு வைக்க வேண்டுமென பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: