நீடாமங்கலம் ஒன்றியத்தில்பல்வேறு கட்சியினர் திமுகவில் ஐக்கியம்

நீடாமங்கலம், ஜன.11: நீடாமங்கலம் ஒன்றியத்தில் பல்வேறு கட்சியிலிருந்து விலகியவர்கள் திமுகவில் இணைந்தனர்.
 நீடாமங்கலம் ஒன்றியம், புதுதேவங்குடி ஊராட்சி முன்னாள் தலைவர் சங்கர் தலைமையில் 50 பேரும், கீழாளவந்தச்சேரியில் செல்வராஜ் தலைமையில் 15 பேரும் மாவட்ட திமுக அவைத்தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான சித்தமல்லி சோமசுந்தரம் முன்னிலையில் பல்வேறு கட்சியிலிருந்து விலகிய  65 பேர் திமுகவில் இணைந்தனர். அவர்கள் அனைவரையும் துண்டு அணிவித்து வரவேற்றனர். நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, மாநில மாணவரணி முன்னாள் இணைச் செயலாளர் வக்கீல் செந்தமிழ்ச்செல்வன், நகர செயலாளர் ராஜசேகரன், ஒன்றிய அவைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், வக்கீல் மகாதேவன், சந்துரு, முன்னாள் ஊராட்சி தலைவர் நடேசமணி உள்ளிட்ட பல்வேறு  அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

× RELATED கோவில்பட்டியில் அமமுகவினர் அதிமுகவில் ஐக்கியம்