உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

முத்துப்பேட்டை, ஜன.11: முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் பள்ளி செல்லா குழந்தைகளுக்கான உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மத்தியில் சமத்துவத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு ஆலோசனைகளுடன் பாரம்பரிய பொங்கல் சிறப்புகளை வந்திருந்தவர்கள் கூறினர். தொடர்ந்து பொங்கல் வைத்து அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வர்த்தக சங்கத்தின் நிர்வாகி சேகர், ஒருங்கிணைந்த வட்டாரக் கல்வி இயக்கத்தின் சிறப்பாசிரியர் சங்கர், ஆசிரியைகள் ராதிகா, சர்மிளா, ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்  மற்றும் பெற்றோர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


× RELATED மாவட்டம் அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி