சண்முகநாதன் இன்ஜி. கல்லூரியில் மின்னணுவியல் கருத்தரங்கம்

திருமயம், ஜன.11: திருமயம் அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.  கல்லூரி மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத்தலைவர் வரதராஜன் வரவேற்றார். இதனை தொடர்ந்து  சிறப்பு விருந்தினர்களை உதவிப் பேராசிரியர் தைலா அறிமுகம் செய்து வைத்தார்.நிகழ்ச்சியில் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியர்கள் செல்வன், மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். இக்கருத்தரங்கில் மின்னியல் தேவைகளின் துல்லியமான பயன்பாடுகளை அறிந்துகொண்டு அதற்கேற்ப மின்சார வசதிகளை கையாளுவதற்கான புள்ளி விவர சேகரிப்பு பற்றிய தொழில்நுட்பம் குறித்து விளக்கப்பட்டது.
இது தொடர்பான மாணவ, மாணவியரின் பல்வேறு சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பொறியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

× RELATED கல்லூரி மாணவர்கள் பேரணி