பள்ளியில் பொங்கல் விழா

பொன்னமராவதி, ஜன. 11: பொன்னமராவதியில் உள்ள அலமேலு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. இதையொட்டி பள்ளி தலைமையாசிரியை அல்போன்ஸா தலைமையில் பள்ளி வளாகத்தில் பொங்கலிட்டு விழா கொண்டாடப்பட்டது.
இதில் ஆசிரியைகள் விஜயசுதா, அன்னாள் விஜயநிர்மலா, முத்துக்கனி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ராசம்மாள், மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


× RELATED அரசு பள்ளி ஆண்டு விழா