திருமயம் அருகேசாலை பள்ளத்தால் அடிக்கடி விபத்து : வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு

திருமயம்,ஜன.11: திருமயம் அருகே சாலையில் உள்ள பள்ளத்தால் விபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
 திருமயத்தில் இருந்து ராயவரம் செல்லும் முக்கிய சாலையில் கடியாபட்டி செல்வமணி பாலம் அருகே உள்ள குறுகிய பாலம் கடந்தாண்டு இடிக்கப்பட்டு பதிலாக புதிய பாலம் கட்டப்பட்டது. இந்நிலையில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்து 6 மாதத்திற்கு மேலான நிலையில் பாலம் கட்டும் பணிக்காக சாலையில் தோண்டப்பட்ட குழிகள் இன்று வரை சரி செய்யப்படவில்லை. இதனால் சாலையில் உள்ள பள்ளத்தை கவனிக்காமல் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்குவதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழும் நிலை ஏற்பட்டள்ளது. மேலும் இச்சாலை ராயவரம், அரிமளம், திருமயம் செல்லும் முக்கிய சாலை என்பதால் வாகன போக்குவரத்து சற்று அதிகமாகவே காணப்படும். எனவே சாலையில் உள்ள பள்ளத் தால் பெரிய அளவில் விபத்து நடக்கும் முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்து காணப்படும் சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி வாகன ஓட்டிகளில் எதிர்பார்ப்பாக உள்ளது.

× RELATED சென்னை மாநகராட்சியில் வார்டு...