பொன்னமராவதி செம்பூதி பள்ளியில் கராத்தே தற்காப்பு கலை பயிற்சி

பொன்னமராவதி, ஜன. 11: பொன்னமராவதி அருகே உள்ள செம்பூதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கராத்தே தற்காப்பு கலைப்பயிற்;சி நடந்தது.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் சார்பில் புதுக்கோட்டைமாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வனஜா வழிகாட்டுதலின்படி 2018-2019ம் கல்வி ஆண்டிற்கு 6 முதல் 8 வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கான தற்காப்புக் கலை பயிற்சி பொன்னமராவதி ஒன்றியத்திற்குட்பட்ட 18 நடுநிலைப்பள்ளிகளில் தொடங்கப்பட்டு மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. செம்பூதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் பயிற்சியில் பங்கேற்கும் அனைத்து மாணவிகளுக்கும்ட பெற்றோர்களின் பங்களிப்பாக டி சர்ட்கள் வழங்கப்பட்டன. நேற்று நடைபெற்ற பயிற்சியை பொன்னமராவதி வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வக்குமார் பார்வையிட்டு மாணவிகளுக்கு டி சர்ட்டுகள் வழங்கிய பெற்றோர்களையும், முயற்சிக்கு உறுதுணையாக இருந்த பள்ளி தலைமையாசிரியர் ஆரோக்கியசாமி மற்றும் பயிற்சி பொறுப்பாசிரியை சசிகலாதேவி ஆகியோரையும் வாழ்த்தி பாராட்டினார்.
இதில் ஆசிரிய பயிற்றுனர்கள் அன்பழகன், பரிசுத்தம், கராத்தே பயிற்சியாளர் குணசேகரன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவி மீனாள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

× RELATED பொன்னமராவதியிலிருந்து பழனிக்கு பாதயாத்திரை