ஆலங்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கல்

ஆலங்குடி, ஜன.11: ஆலங்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மருத்துமனையிலேயே பிறப்பு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. பிறப்பு, இறப்பு பதிவாளர்  ஜேம்ஸ் முன்னிலை வகித்தார். தலைமை மருத்துவர் பெரியசாமி அரசு  மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு  பிறப்புக்கான சான்றிதழ்களை வழங்கி பேசுகையில், மருத்துவமனைகளில் பிறக்கும்  குழந்தைகளுக்கு, மருத்துவமனைகளிலேயே பிறப்பு சான்றிதழ் வழங்க தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது. முன்பு பிறந்த குழந்தைகளுக்கு பேரூராட்சி மற்றும்  நகராட்சி அலுவலகங்களில் வழங்கப்பட்டு வந்தது. இதனை பதிவு செய்ய அலுவலகத்தில் இருந்து தகவல்களை பெற்று சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதில்  சில சிரமங்கள் இருந்தது. இதனால் தற்போது அந்தந்த மருத்துவமனைகளில்  பிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்ற முறையை அரசால்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பயனாளிகள் மருத்துவமனையில் குழந்தை  பிறந்தவுடனேயே சான்றிதழ்கள் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.  திருவரங்குளம்  டாக்டர் அருள் நன்றி கூறினார்.


× RELATED காப்பக பெண்கள் 86 பேரின் சான்றிதழ்களை வழங்க உத்தரவு