புகையில்லா போகி கொண்டாடுங்கள் கலெக்டர் வேண்டுகோள்

மயிலாடுதுறை, ஜன.11:  நாகை மாவட்டம் மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலையத்தில் பிளாஸ்ட்டிக் மாசில்லா தமிழ்நாடு என்ற திட்டத்தை துவக்கி வைத்த மாவட்ட கலெக்டர் அரசு தடை செய்துள்ள பிளாஸ்ட்டிக் பொருட்களை பொதுமக்கள் வைத்திருந்தால் அவற்றை சேகரிக்கும் மையத்தில் கொண்டு சென்று ஒப்படைக்க வேண்டும், மயிலாடுதுறையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 80 கிலோ பிளாஸ்ட்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது, இப்போகி பண்டிகையில் தேவையற்ற பொருட்கள் எரிப்பதை தவிர்ப்போம் காற்று மாசுபடுவதை தடுப்போம் என்றார்.
அவருடன் மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, நகர் நல அலுலர் மற்றும் சுகாதார அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

× RELATED சுதந்திரமாக செயல்பட முடியவில்லை;...