கொள்ளிடம் ஆற்றில் மணல் திருட்டை தடுக்க கோரிக்கை

கொள்ளிடம், ஜன.11: கொள்ளிடம் ஆற்றில் மணல் திருட்டை தடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொள்ளிடம் அருகே தாண்டவன்குளத்தில் தேமுதிக வின் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. ஒன்றிய செயலாளார் வாசுதேவன் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் சத்தியபிரசாத் வரவேற்றார். மாவட்ட மகளிரணி  தலைவி கலைச்செல்வி, மாவட்ட பிரதிநிதிகள் மார்ட்டின், செந்தில்குமார், கல்பனா முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஜலபதி சிறப்புரையாற்றினார்.
கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து இரவு நேரங்களில் தடையை மீறி சில அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் திருட்டு மணல் அள்ளப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். மணல் திருட்டுக்கு உடந்தையாக இருந்து வரும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலோர கிராமங்களில் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

× RELATED ஈரோடு அருகே இரவு பகலாக தொடரும் மணல்...