சீர்காழி கீழதென்பாதியில் கழிப்பறை பராமரிக்கப்படுமா? -பொதுமக்கள் கோரிக்கை

சீர்காழி, ஜன.11: சீர்காழி நகராட்சிக்குட்பட்ட கீழதென்பாதி மொன்னையன் மேட்டுத்தெருவில் திறந்த வெளியில் மலம் கழிப்பதை ஒழிக்கும் திட்டத்தின் கீழ் கடந்த 2014ம் ஆண்டு ரூ.16 லட்சம் செலவில் கழிப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. இதனை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கழிப்பறை பராமரிக்கப்படாததால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் கழிப்பறை கட்டிடம் பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி கழிப்பறை கட்டிடத்தை சுத்தம் செய்து பராமரிக்க ஆட்களை நியமித்து கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

× RELATED லத்தி வீசியதால் டூவீலரில் இருந்து...