நுகர்பொருள் வாணிப கழகத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பட்டியல் எழுத்தர் பணி - விண்ணப்பிக்க 21ம்தேதி கடைசி

நாகை, ஜன.11: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் நெல் கொள்முதல் பணிக்காக பருவகால தற்காலிக பட்டியல் எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க வரும் 21ம்தேதி கடைசி நாளாகும்.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நெல் கொள்முதல் பணிக்காக பருவகால தற்காலிக பட்டியல் எழுத்தர் பணி 108 நபர்கள் தேவைபடுகிறார்கள். கல்வி தகுதி பி.எஸ்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உதவுபவர் பணிக்கு 50 நபர்கள் தேவைப்படுகிறார்கள். 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு பணியிடங்களுக்கும் வயது 1.7.2018 தேதியில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் அருந்ததியர் 35 வயதும், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், சீர்மரபினர் ஆகியோருக்கு 32 வயதும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு விதிமுறைபடி 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு செய்யப்படும். மேற்கண்ட வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதி உடைய மற்றும் விருப்பம் உள்ளவர்கள் 21.1.2019 தேதிக்குள் தங்களது அனைத்து கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, ஜாதி சான்று, இருப்பிட சான்று நகல்களுடன் முதுநிலை மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பாருள் வாணிப கழகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் நாகை 611 003 என்ற முகவரிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு நாகை கலெக்டர் சுரேஷ்குமார் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

× RELATED நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு...