திருமருகலில் திமுக ஊராட்சி சபை கூட்டம்

நாகை, ஜன.11: நாகை மாவட்டம் திருமருகல் வடக்கு ஒன்றியம் திருமருகல் ஊராட்சியில்  தி.மு.க. சார்பில்  மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம் என்ற முழக்கத்துடன்  ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கவுதமன் தலைமை தாங்கினார். பொதுக் குழு உறுப்பினர் மணிவண்ணன, மாவட்ட பிரதிநிதி ஹாஜாநிஜாமுதின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன் வரவேற்றார். கூட்டத்தில் நாகை நாடாளுமன்றத்திற்கு  தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர் கிரகாம்பெல் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில்  மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் கேஸ்செந்தில்,  மாவட்ட சார்பு அணி துணை அமைப்பாளர்கள்  வடிவேல், தங்கதுரை, செந்தில்நாதன்,  உமாபதி,  திருவேங்கடரவி, ஊராட்சி  செயலாளர் ஜெயக்குமார் மற்றும் ஊராட்சி, வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

× RELATED பிரதமரிடம் திமுக மனு