தில்லையாடி அரசு மேல்நிலை பள்ளி சத்துணவு கூடத்தில் எம்எல்ஏ திடீர் ஆய்வு

தரங்கம்பாடி, ஜன.11: நாகை மாவட்டம், தில்லையாடியில் உள்ள தியாகி வள்ளியம்மை மேல்நிலை பள்ளி சத்துணவு கூடத்தை பூம்புகார் எம்எல்ஏ பவுன்ராஜ் திடீர் ஆய்வு செய்தார்.தியாகி வள்ளியம்மை மேல்நிலை பள்ளி கடந்த ஆண்டு தான் மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்பள்ளியில் பயிலும் 11ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு சென்ற பூம்புகார் எம்எல்ஏ பவுன்ராஜ் 49 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். தொடர்ந்து அருகில் இருந்த சத்துணவு கூடத்திற்கு சென்று திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது அங்கு மாணவர்கள் சாப்பிட தயாரித்து வைக்கபட்டிருந்த எலுமிச்சை சாதத்தை எடுத்து சாப்பிட்டு ருசி பார்த்ததார். சத்துணவு கூடத்தை சுகாதாரமாக வைத்து கொள்ளவும், சமையல் செய்த உணவுகளை பாதுகாப்பாக வைத்து கொள்ளவும் அறிவுறுத்தினார். அப்போது தலைமை ஆசிரியர் கருணாநிதி, ஆசிரியர்கள் ஜெய்க்குமார், லென்னிராஜேந்திரன் உடனிருந்தனர்.

× RELATED கலசபாக்கம் அருகே சீரான குடிநீர்...