காங்கயம் அருகே வேனில் வந்து ஆடு திருடிய இருவருக்கு தர்மஅடி

காங்கயம்,ஜன.11: காங்கயம் அருகே வேனில் வந்து ஆடு திருடிய இருவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

காங்கயம் சென்னிமலை ரோட்டில் சாவடி பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர் ராசன்(55). டீக்கடையுடன் பிளாஸ்க்கில் டீ போட்டு சைக்கிளில் சென்று அக்கம் பக்கதிதில் இருக்கும் கொப்பரை கள தொழிலாளர்களுக்கும் டீ சப்ளை செய்து வருகிறார். இவர் தனது கடைக்கு எதிரில் உள்ள காட்டில் 5க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று மதியம் கடையில் இருந்தபோது ஒரு வேனில் அவரது டீக்கடைக்கு முன்பு ஆடுகள் கட்டப்பட்டிருந்த காட்டுப் பகுதிக்கு அருகில் நிற்பதும் பின்னர் மெதுவாக நகர்வதுமாக இருந்தது. சந்தேகமடைந்த ராசன் உன்னிப்பாக கவனித்து பார்த்தபோது காருக்குள் 2 ஆடுகள் இருந்தது. சந்தேகமடைந்த ராசன் காருக்கு அருகில் சென்றார். உடனே கார் டிரைவர் காரை வேகமாக கிளப்பினார். உடனே சுதாரித்த ராசன் தனது சைக்கிளை காருக்கு முன்பு தள்ளிவிட்டார். சைக்கிள் காரின் முன் பகுதியில் சிக்கிக் கொண்டது. சைக்கிளுடன் கார் காங்கயம் நோக்கி அசுர வேகத்தில் பறந்தது.  உடனே அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்து பின்னால் பைக்குகள் மூலம் காரை விரட்டிச் சென்றனர்.

அதே நேரம் நல்லிக்கவுண்டன்வலசு பிரிவில் பொதுமக்கள் சிலர் கார் சைக்கிளை இழுத்துக் கொண்டு வருவதைக் கவனித்து எங்கேயோ விபத்தை ஏற்படுத்திவிட்டு வந்துவிட்டதாக கருதி காரை மடக்கி பிடித்தனர்.அதற்குள் பின்னால் ராசன் உட்பட அப்பகுதியைச் சேர்ந்தவர்களும் வந்து சேர காரில் இருந்தவர்களை கீழே இறக்கி விசாரித்தபோது முன்னுக்கு பின் முரனாக பதில் கூறினர். காரில் இருந்த ஆடுகள் வாங்கி வந்ததாகவும் அவைகள் திண்டுக்கல் வியாபாரிக்கு கொண்டு செல்வதாகவும் கூறினர்.

ஆனால் ஆடுகளின் கயிறுகள் வெட்டப்பட்டிருந்ததால் அந்த ஆடுகள் திருடப்பட்டது எனத் தெரிந்து காரில் வந்த இருவருக்கும் தர்மஅடி கொடுத்து காங்கயம் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: