உடுமலை பேருந்து நிலையத்தில் கழிப்பறை இடிப்பால் பயணிகள் அவதி

உடுமலை, ஜன.11:  உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில், கிழக்கு பகுதியில் கழிப்பறை கட்ட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, நகராட்சி சார்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.65 லட்சம் செலவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது  ஆண், பெண் கழிப்பறைகள் கட்டப்பட்டன. மேலும் புதிய இருக்கைகள், சுத்திகரிப்பு குடிநீர் மையம் ஆகியவை அமைக்கப்பட்டன.

இந்நிலையில், சமீபத்தில் இந்த கழிப்பறையை இடித்துவிட்டனர். இதனால் பயணிகள் சிரமப்படுகின்றனர். பலர் திறந்த வெளியில் சிறுநீர், மலம் கழித்து செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.எனவே, அங்கு மீண்டும் கழிப்பறை கட்ட வேண்டும். அல்லது தற்காலிகாக ஏற்பாடாக மொபைல் சிறுநீர் கழிவறையை அங்கு வைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: