தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்

அவிநாசி,ஜன.11: தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என அவிநாசியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேசினார்.மக்களிடம் செல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம் என்ற முழக்கத்தை முன்னிறுத்தி அனைத்து ஊராட்சிகளிலும் திமுக சார்பில் பொது மக்களை சந்திக்கும்  ஊராட்சி கிராம சபைக்கூட்டங்கள் நேற்று அவிநாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி உள்ளிட்ட பல ஊராட்சிகளில் நடந்தது.   

கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா., மாவட்ட செயலாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு, கிராமமக்களின் குறைகளை கேட்டறிந்தனர். அப்போது பொதுமக்கள் தரப்பில் கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை மற்றும் குடிநீர்வசதி, சாக்கடை வசதி  உள்ளீட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் தமிழக அரசுக்கு பலமுறை விண்ணப்பித்தும் உதவி தொகைகள் வழங்கப்படவில்லை. என்று குற்றம் சாட்டினர். கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேசியதாவது: மக்களிடத்தில் அடுத்த ஆட்சி திமுக ஆட்சிதான் என்ற ஆழமான நம்பிக்கை வந்துள்ளது. மூன்று மாத காலத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரப்போகிறது. இதில் திமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் ஏற்படும். திமுக ஆட்சிக்கு வரும். மக்கள் கொடுத்துள்ள இந்த கோரிக்கை மனுக்களை உரிய அதிகாரிகளிடம் எடுத்துக்கொண்டு செல்வோம். பிரச்னைகளை தீர்த்து வைப்போம்.தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும்  பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்படும்.

இவ்வாறு கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா பேசினார்.

பழங்கரையில் நடைபெற்ற கூட்டத்திற்கு  ஊராட்சி செயலாளர் சேதுமாதவன் தலைமை தாங்கினார். மேலும் ஊராட்சி செயலாளர்கள் குப்பாண்டம்பாளையத்தில் சண்முகம், துலுக்கமுத்தூர் ஊராட்சியில் சென்னியப்பன், நடுவச்சேரி ஊராட்சியில் வரதராஜன், அய்யம்பாளையம் ஊராட்சியில் பொன்னுசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். அவிநாசி ஒன்றிய திமுக பொறுப்பாளர் பழனிசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் சரவணன்நம்பி, சாந்திபாபு, மாவட்ட அவைத்தலைவர் திருமூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராசு, அன்னூர் ஒன்றிய செயலாளர் இ.ஆனந்தன்,  தலைமை செயற்குழு உறுப்பினர் அன்னூர் நடராசன், நகர செயலாளர்கள் அவிநாசிபொன்னுசாமி, பூண்டி பாரதி,

ஒன்றிய துணைசெயலாளர் வரதராஜன். ஒன்றியபொருளாளர் பாலு, மாவட்ட இளைஞரணி துணைசெயலாளர் சிவபிரகாஷ், மாவட்ட பிரதிநிதி அவிநாசியப்பன். மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் செல்வரங்கம்., மாவட்ட மாணவரனி லோகநாதன், சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் உள்பட பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: