பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜன.11: பன்னிரண்டு அம்ச தொழிற்சங்க கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின்  சார்பில் நேற்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விலைவாசி உயர்வை கட்டுபட்டுத்த வேண்டும். ஒப்பந்த  தொழிலாளார்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும், அனைத்து  ஓய்வூதியர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க  வேண்டும்.

ரயில்வே காப்பீடு பாதுகாப்பு துறைகளில் பன்னாட்டு மூலதனத்தை  அனுமதிக்காதே, ஒப்பந்த ஊழியர் முறையினை ரத்துசெய்து சமவேலைக்கு சம ஊதியம்  வழங்குக உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த  வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு ஆதரவான பி.எஸ்.என்.எல் ஊழியர்களின்  ஆர்பாட்டத்திற்கு பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்க கிளை தலைவர்கள் வாலீசன்,ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

பிஎஸ்என்எல் ஊழியர் சங்க  மாவட்ட தலைவர் முகமது ஜாபர், மாநில உதவி செயலாளர் சுப்பிரமணியன்   ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் திரளானோர் கலந்துகொண்டு முழக்கமிட்டனர்.

Related Stories: