மற்றவர்களை பெருமைப்படுத்தி தன்னை தாழ்த்திக் கொண்டவர் குமரகுருபரர்

கோவை, ஜன.11: கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளியில்  கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ‘எப்போ வருவாரோ’ ஆன்மீக நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில் ‘குமரகுருபரர்’ என்ற தலைப்பில் அருளாளர் சொ.சொ.மீ.சுந்தரம் நேற்று பேசியதாவது: குமரகுருபரரை பற்றி பேசினால், நிறைய சொல்லலாம். தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் காந்தியடிகளின் எதிரே ஒருவர் ரத்தக் காயத்துடன் வந்தார். அவரை பார்த்து காந்தியடிகள் நீ யாரப்பா என கேட்டார். அவரும் என் பெயர் பாலசுந்தரம் என்றார். உடம்பெல்லாம் ஏன் காயமாக உள்ளது என காந்தியடிகள் கேட்டதற்கு, இது வெள்ளைக்கார முதலாளி எனக்கு கொடுத்த கூலி, ஒரு நாளைக்கு 20 மணி ேநரம் வேலை பார்க்கிறேன். 4 மணி நேரம் அடி வாங்குகிறேன் என்றார்  பாலசுந்தரம். மேலும், கை இடுக்கில் வைத்துள்ள துண்டை தோளில் போட்டால், தோள் இருக்காது எனவும் பாலசுந்தரம் கூறினார். அவரை பார்த்து காந்தியடிகள் உனக்கு நான் என்ன செய்ய வேண்டும் என கேட்டார். அதற்கு பாலசுந்தரம் வக்கீலான நீங்கள் எனது வழக்கை எடுத்து நடத்த வேண்டும் என்றார். அதன்படி காந்தியடிகள் பாலசுந்தரத்தின் வழக்கை எடுத்து நடத்தி அதில் வெற்றிப் பெற்று வந்தார். இதனால் ஏராளமானோர் காந்தியடிகளை நாடி வந்தனர். இதன் காரணமாகவே தென் ஆப்பிரிக்காவில் ஒத்துழையாமை இயக்கப்போர் தொடங்கியது.

 இதையடுத்து காந்தியடிகள், பாலசுந்தரம் மற்றும் 13 வயதே நிரம்பிய தில்லையடி வள்ளியம்மை என்ற சிறுமி ஆகியோரை சிறையில் அடைத்தார்கள். அந்த காலத்தில் சிறையில் கொடுமை அதிகம். ஆனால் இந்த காலத்தில் சிறைக்கு சென்றால் 11 கிலோ எடை கூடிவிடும். சிறையில் ஏற்பட்ட கொடுமையை தாங்க முடியாமல் தில்லையடி வள்ளியம்மை நோய்வாய்பட்டு, இறக்கும் தருவாயிக்கு சென்றார். அவரை பார்த்து காந்தியடிகள், இந்த வயதில் இறந்து போக போகிறோமே என்று வருந்துகிறாயா என கேட்டார். அதற்கு தில்லையடி வள்ளியம்மை, 2 கைகள், 2 கால்கள், 2 கண்கள் என கொடுத்த கடவுள், 2 உயிரை எனக்கு கொடுத்திருந்தால், ஒரு உயிரை உங்களின் ஒத்துழையாமை இயக்க போருக்காக தந்திருப்பேன் என்றார். அதை கேட்டு கண்ணீர் விட்ட காந்தியடிகள் நீ தானம்மா உண்மையான தமிழ்பெண். உனக்காகவே நான் தமிழ் படிக்கிேறன் என கூறியதோடு, தமிழை கற்றார்.  தொடர்ந்து குமரகுருபரர் பாடிய பாடல்களைளே காந்தியடிகள் படித்தார். அந்த அளவுக்கு குமரகுருபரர் பாடல்கள் மற்றவர்களுக்கு ஒரு துண்டுகோளாக விளங்கியது. குமருருபரர் பாட்டில், இருப்போர் இல்லாதவருக்கு கொடுக்க வேண்டும். நம்மை விட எளியோரை பார்த்து, நாம் எவ்வளவோ பரவாயில்லை என நிம்மதி அடைய வேண்டும். உன்னை பாராட்ட வேண்டுமா? மற்றவர்களின் தீமைகளை சொல்லாதே, அவர்களை பற்றி பெருமையாக சொல் என ஏராளமான கருத்துக்கள் இருக்கும். மற்றவர்களை பெருமைப்படுத்தி தன்னை தாழ்த்திக் கொண்டவர் தான் குமரகுருபரர். எல்லாம் எனக்கு தெரியும் எனக் கூறக்கூடாது. எதுவும் தெரியாது என கூற வேண்டும் என கூறியவர் அவர். இவ்வாறு அவர் பேசினார்.


× RELATED உ.பி.யில் புழுதி புயல், மின்னல் தாக்கி 25 பேர் பலி: 48 பேர் படுகாயம்