அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, ஜன. 11: மத்திய, மாநில அரசின் தவறான பொருளாதார கொள்கையால் அரசு ஊழியர்கள் பாதிக்கப்படுவதாக  கூறி தமிழ்நாடு அரசு அனைத்து துறை சங்கங்களின் போராட்டக்குழுவினர் நேற்று கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தெற்கு வட்ட கிளை தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். இதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு, வருவாய் கிராம ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். போனஸ் மற்றும் தகுதி உச்சவரம்பை நீக்க வேண்டும். பனிக்கொடை தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். தொழிலாளர் நல சட்டங்கள் திருத்தம் செய்வதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.× RELATED அரசு ஊழியர்களும் சரியான நேரத்துக்கு...