புன்செய் பாசனத்திற்காக அந்தியூர் வறட்டுப்பள்ளம் அணையில் இன்று தண்ணீர் திறப்பு

அந்தியூர், ஜன. 11:  புன்செய் பாசனத்திற்காக அந்தியூர் அருகே உள்ள வறட்டுப்பள்ளம் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட உள்ளது.    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வனப்பகுதியில் வறட்டுப்பள்ளம் அணை உள்ளது. இந்த அணைக்கு தோனி மடுவு, கும்பரவாணி, தாமரைக்கரை மேற்குப்பகுதி, வரட்டுப்பள்ளம் ஆகிய பகுதிகளில் பெய்யும் மழை நீர் வருகிறது. இந்த அணையில் இருந்து பாசனத்திற்கும், மீன் வளர்ப்பிற்கும் மற்றுமின்றி வனவிலங்குகளின் தாகம் தீர்ப்பதற்கும் பயன்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 32 அடி கொள்ளளவு கொண்டதில், தற்போது 28 அடி தண்ணீர் உள்ளது. இந்நிலையில் புன்செய் பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. கெட்டி சமுத்திரம் ஏரி, அந்தியூர் ஏரி, பிரம்மதேசம் ஏரி, 57 ஆப்பக்கூடல் ஏரி ஆகியோருக்கு செல்லும் இந்த தண்ணீரால் 1139 ஏக்கர் நிலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது.   இதன்படி 11 நாட்களுக்கு 18.06 கன அடி திறக்கப்படும். இதனை அந்தியூர் எம்எல்ஏ., ராஜாகிருஷ்ணன் திறந்து வைக்கிறார். இந்த தண்ணீரை பயன்படுத்தி புன்செய் பாசன விவசாயிகள் மக்காச்சோளம், எள், நிலக்கடலை உள்ளிட்ட மானாவாரி பயிர்களை பயிர் செய்து பயன்பெறுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: