ரூ.3.24 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

அந்தியூர், ஜன. 11: ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்  வாரந்தோறும் புதன்கிழமை அன்று நிலக்கடலை ஏல விற்பனை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று நடந்த ஏலத்தில் காய்ந்த நிலக்கடலை 180 மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தது. இது கிலோ ஒன்று குறைந்தபட்சம் ரூ.46.35 முதல் அதிகபட்சமாக ரூ.50க்கும் என ரூ.3 லட்சத்து 12 ஆயிரத்து 177 ஏலம் போனது. இதே போல் பச்ச நிலக்கடலை 7 மூட்டைகள் ஏலத்திற்கு வந்திருந்தது. இதில் பச்ச நிலக்கடலை குறைந்தபட்சமாக ரூ.28 முதல் அதிகபட்சமாக ரூ.30 என ரூ.11 ஆயிரத்து 986க்கு ஏலம் போனது. இதில் மொத்தம் ரூ.3லட்சத்து 23 ஆயிரத்து 165க்கு நிலக்கடலை ஏலம் நடந்தது.


× RELATED ரூ.7 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்