திருப்புத்தூரில் பொங்கல் விழாவிற்காக கல்லூரி மாணவர்கள் உருவாக்கும் செயற்கை கிராமம்

திருப்புத்தூர், ஜன. 11:  திருப்புத்தூரில் பொங்கல் பண்டிகை விழாவிற்காக கல்லூரி மாணவர்கள் செயற்கையாக கிராமத்தை உருவாக்கி வருகின்றனர்.திருப்புத்தூர் நேஷனல் அகாடமி சமுதாய கல்லூரி சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் விழா தமிழர்களின் கலாச்சார விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு பொங்கல் விழாவிற்கு கல்லூரி வளாகத்திலே கோயில், வயல், மாட்டுக்கொட்கை, தண்ணீர் பந்தல், டீ கடை, பெட்டிக்கடை, கபடி தளம், உறியடித்தல், குட்டை என செயற்கை கிராமத்தை உருவாக்கி வருகின்றனர். இங்கு இன்று பாரம்பரிய சமத்துவ பொங்கல் விழா நடைபெறுகிறது. இதில் நகரின் முக்கிய நபர்களும், சில வெளிநாட்டுக்காரர்களும் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் சுரேஷ்பிரபாகர் தலைமையில் மாணவ, மாணவிகள் செய்து வருகின்றனர்.

× RELATED கல்லூரி மாணவர்கள் பேரணி