மாணவர்களுக்கு மேம்பாட்டு பயிற்சி

காரைக்குடி, ஜன. 11: காரைக்குடி அருகே கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் பாலமுருகன் வரவேற்றார். செயலாளர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். கல்லூரி அறங்காவலர் ராஜா பயிற்சியை துவக்கி வைத்தார். யோசி குழும பயிற்சியாளர் முருகபாரதி பயிற்சி வழங்கினார். மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய பண்பு நலன்கள், குழு கலந்தாய்வு, கால நிர்வாகம் உள்பட பல்வேறு பயிற்சி அளிக்கப்பட்டது. துறை தலைவர் சேகர் நன்றி கூறினார்.


× RELATED பணித்தளங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி