பள்ளியில் தமிழ் கட்டுரை எழுதும் போட்டி

தேவகோட்டை, ஜன.11: தேவகோட்டையில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் கட்டுரை எழுதும் போட்டி நடைபெற்றது. தாளாளர் வைரம்வடிவேலு தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் கணேசன் வரவேற்றார். ஆசிரியர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். ராமசாமி தமிழ்க்கல்லூரி பேராசிரியர் ஜெயமணி நடுவராக போட்டிகளை நடத்தினார். தேவகோட்டை வட்டாரத்தில் உள்ள தனியார் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ஆசிரியர்கள் சுரேஷ், ஜஸ்டின் செல்வகுமார் நிகழச்சிக்கான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.


× RELATED தமிழகம் முழுவதும் கணினி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு தொடங்கியது