மாவட்டத்தில் 15,529 லைசென்ஸ் தற்காலிக ரத்து

சிவகங்கை, ஜன. 11:  சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2018ம் ஆண்டில் 15 ஆயிரத்து 529 லைசென்சுகள் தற்காலி ரத்து செய்யப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்ட எஸ்பி ஜெயச்சந்திரன் தெரிவித்ததாவது: கடந்த 2017ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2018ம் ஆண்டில் போலீசாரின் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளால் விபத்து சம்பவங்கள் எண்ணிக்கை அளவில் 249 குறைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் வந்து இணையும் இணைப்புச் சாலைகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. திருட்டு வழக்குககள் 2017ம் ஆண்டில் 395 வழக்கு, 2018ம் ஆண்டில் 317 வழக்குகளும் பதிவாகியுள்ளன. இரவு நேர ரோந்தின் மூலம் இரவு திருட்டு சம்பவங்கள் பெருமளவில் குறைந்துள்ளன.

2017ம் ஆண்டில் 67 செயின் பறிப்பு, 2018ம் ஆண்டில் 62 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. 2017ல் 54 சதவீதமும், 2018ல் 81 சதவீதமும் திருடு போன பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக குற்றச் சம்பவங்களில் ஈடுபடாத 51 பேர் ரவுடி லிஸ்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். 2017ம் ஆண்டில் 238 மணல் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2018ம் ஆண்டில் 585 மணல் கடத்தல் வழக்குகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2018ல் லாரிகள் பறிமுதல் மணல் கடத்தியவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்துள்ளது. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது, ஓவர் ஸ்பீடு, அதிக ஆட்களை ஏற்றி செல்வது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 2018ம் ஆண்டில் மாவட்டம் முழுவதும் 15ஆயிரத்து 529 வாகன ஓட்டிகளின் லைசென்ஸ் தற்காலி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்தார்.

× RELATED திண்டுக்கல் மகளிர் காவல்நிலைய...