இடைநின்ற மாணவர்களை கண்டறிய கள ஆய்வு

சிவகங்கை, ஜன. 11:  சிவகங்கையில் வட்டார வள மையம் சார்பில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 2018-2019ம் ஆண்டில் பள்ளி செல்லா, இடைநின்ற, இடம்பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகளை கண்டறிவதற்கான மூன்றாம் கட்ட சிறப்பு கணக்கெடுப்பு நடந்தது. சிவகங்கை அருகே பழமலைநகர் குடியிருப்பு பகுதியில் நடந்த இந்த கள ஆய்வில் பள்ளி செல்லா குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் ஊர்த்தலைவர் ஆகியோருடன் கலந்துரையாடி குழந்தைகளை தொடர்ச்சியாக பள்ளிக்கு அனுப்ப அறிவுறுத்தினர். வட்டார வளமைய மேற்பார்வையாளர்(பொ) கந்தவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அப்துல்கலாம்ஆசாத், சிவகங்கை மாவட்ட புள்ளியியல் அலுவலர் நாகராஜன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், தொண்டு நிறுவனத்தினர் இதில் கலந்துகொண்டனர்.

× RELATED தலையாரிக்கு மிரட்டல்