திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டிராமேஸ்வரம் கோயிலில்
ராமேஸ்வரம், ஜன. 11: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் நேற்று திருப்பாவை,திருவெம்பாவை விழா நடைபெற்றது. இதையொட்டி கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் இணை கமிஷனர் மங்கையர்கரசி தலைமையில் பள்ளி மாணவ, மாணவிகள் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி பெண்கள் பள்ளி, விவேகானந்தா வித்யாலயா பள்ளி, அரசு மேல்நிலை ப்பள்ளி, சரஸ்வதி துவக்க பள்ளியை சேர்ந்த 150 மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகள் 17 பேருக்கு பரசுகளும், பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது. கோயில் கண்காணிப்பாளர் ககாரின், இணை கமிஷனர் உதவியாளர் கமலநாதன், கோயில் ஓதுவார் அசோக் உட்பட பள்ளி ஆசிரியர்கள், கோயில் பணியாளர்கள் பங்கேற்றனர்.

× RELATED தமிழகம் முழுவதும் கணினி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு தொடங்கியது