ராட்சி பள்ளி மாணவர்களுக்கு சீருடை

ராமநாதபுரம், ஜன.11:  ராமநாதபுரம் அருகே உச்சிபுளி ஊராட்சி மன்ற துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்கும் விழா நடைபெற்றது. ரோட்ரி சங்க தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் லலிதா வரவேற்றார். ரோட்டரி முன்னாள் ஆளுனர் சின்னத்துரை அப்துல்லா வாழ்த்துரை வழங்கினார். ராமநாதபுரம் ரோட்டரி சங்க தலைவர் காந்தி ரூ.50ஆயிரம் மதிப்புள்ள சீருடைகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். இதில் பட்டைய தலைவர்கள் ரவிச்சந்திர ராமவன்னி, நாகேஸ்வரன், மற்றும் உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். செயலாளர் தாமரைச் செல்வன் நன்றி கூறினார்.× RELATED மாநகரில் சீரான குடிநீர் விநியோகம் சிறப்பு கண்காணிப்பு குழு நியமனம்