சாரணிய மாணவர்கள் கிராமங்களில் உழவாரப் பணி

ராமநாதபுரம், ஜன.11:  ராமநாதபுரம் அருகே பெருவயல் கிராமத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ரெணபலி முருகன் கோயிலில் சாரண,சாரணியர் மாணவர்கள் சார்பில் உழவாரப் பணிகள் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் தலைமையேற்று துவக்கி வைத்தார். கோயில் நிர்வாகிகள் சாத்தப்பன், சேதுசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். மாவட்ட சாரணர் ஆணையாளர்கள் பாலதண்டாயுதபாணி, ராக்லாண் மதுரம் உரையாற்றினர். இப்பணியில் திருப்பாலைக்குடி, தேவிபட்டிணம், தொருவளூர் அரசுப்பள்ளிகள், சிபான் நூர் குளோபல் அகடாமி, கிருஷ்ணா மெட்ரிக் பள்ளிகள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.× RELATED கல்லூரி மாணவர்கள் பேரணி