போகலூர் ஒன்றியத்தில் திமுக சார்பில் கிராமசபை கூட்டம்

பரமக்குடி, ஜன.11: போகலூர் ஒன்றியத்தில் திமுக சார்பாக ஊராட்சி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள ஒன்றிய அளவிலான ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடத்தி பொதுமக்களின் குறைகளை கேட்டு அதற்கான நடவடிக்கை மற்றும் அரசுக்கு எதிரான போராட்டங்களை செய்ய வேண்டும் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் போகலூர் ஒன்றியம் பொட்டிதட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தீர்மானக் குழு துணைத்தலைவர் திவாகரன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கதிரவன் வரவேற்றார். கூட்டத்தில் ஊராட்சி வாரியாக பொதுமக்களின் தேவைகள் மற்றம் குறைககள் கேட்கப்பட்டது. வரும் தேர்தலில் அவைகள் அனைத்தும் வாக்குறுதிகளாக கொடுக்கப்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட துணைச்செயலாளர் அகமதுதம்பி, மாவட்ட வர்த்தக அணியின் துணை செயலாளர் முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.× RELATED பண்ணுவார்பட்டியில் கிராம சபை கூட்டம்