காந்திநகர் பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ்கள் நின்று செல்ல வலியுறுத்தல்

மண்டபம், ஜன.11: மண்டபம் காந்திநகர் பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ் நின்று செல்ல பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டபம் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் மற்றும் ரயில்வே காலனி பகுதியில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 550க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தீர்க்கப்படாத பிரச்னை காந்திநகர் பஸ் நிறுத்தத்தில் அரசு  பஸ்கள் நின்று செல்வதில்லை என்பது தான். இதனால் இப்பகுதி மக்கள் நீண்டநேரம் காத்திருந்து பயணம் செய்ய வேண்டிய அவல நிலையுள்ளது. இதுகுறித்து காந்திநகர் பகுதி மக்கள் கூறும்போது, மண்டபம் காந்தி நகர் பகுதியில் அரசு பஸ்கள் நின்று செல்வதில்லை. இதனால் காந்நி நகர் மக்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ,மாணவிகள் என அனைவரும் காந்திநகர் பேருந்து நிறுத்தத்தில் நீண்டநேரம் கால் கடுக்க காத்திருந்து பயணம் செய்ய வேண்டி அவல நிலையுள்ளது.

மேலும் காந்திநகர் பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மண்டபம் பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை மனு கொடுத்தும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் மண்டபம் காந்திநகர் பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு காந்திநகர் பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


× RELATED திருவள்ளூர் பஸ்டெப்போ அருகே பஸ்...