பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மதுவிலக்கு பிரச்சார சைக்கிள் பேரணி

ராமநாதபுரம்,ஜன.11:  ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை, மதுவிலக்கு அமலாக்கபிரிவு சார்பில் மதுவிலக்கை வலியுறுத்தி சைக்கிள் பிரச்சார பேரணி நடைபெற்றது. கலெக்டர் வீரராகவராவ் தலைமை தாங்கினார். பேரணியை டிஐஜி காமினி கொடியசைத்து துவக்கி வைத்தார். எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா, ஏடிஎஸ்பி வெள்ளதுறை, முதன்மைகல்வி அலுவலர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஜூனியர் ரெட்கிராஸ், சாரண,சாரணியர் சங்கத்தின் மாணவ மாணவிகள் கல்வி நிரந்தரமானது, மது போதை தற்காலிகமானது போன்ற மதுவால் ஏற்படும் தீமைகள் பற்றிய விளம்பர பதாகைகளை பேரணியில் ஏந்தி வந்தனர். ராமநாதபுரம் சுவாட்ஸ் மேல்நிலைப் பள்ளியிலிருந்து துவங்கிய பேரணி சாலைத்தெரு, அக்ரகாரம் ரோடு, அரண்மனை, கேணிக்கரை, வழிவிடு முருகன் கோயில், புது பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை ரோடு வழியாக பள்ளியை வந்தடைந்தது. 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பேரணியில் மாணவர்களுடன் இணைந்து கலெக்டர், எஸ்பி, ஏடிஎஸ்பி, சிஇஒ சைக்கிளை ஓட்டி வந்தனர். நிறைவாக பள்ளி மாணவர்களுக்கு மதுவினால் ஏற்படும் விளைவுகள் பற்றிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பள்ள மாணவிகள் கலந்து கொண்ட மதுவின் தீமைகளும் மாணவர்களின் பங்களிப்பும் என்ற தலைப்பில் பேச்சு போட்டி நடைபெற்றது, இதில் 15 பள்ளிகளை சேர்ந்த 30 மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் திருக்குறள் புத்தகம்  பரிசாக வழங்கப்பட்டது. சிறப்பாக பேசிய முதல் மூன்று பேருக்கு ரொக்க பரிசாக ரூ.5000, 3000, 2000 வழங்கப்பட்டது.


× RELATED விழிப்புணர்வு பிரசாரம்