இன்று ராமநாதபுரம் வரும் கவர்னரிடம் கோரிக்கை மனு அளிக்கலாம்கலெக்டர் தகவல்

ராமநாதபுரம், ஜன.11: ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று வருகிறார். இன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் கவர்னர் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் கோரிக்கை மனுக்கள் அளிக்க விருப்பமுள்ளவர்கள் சந்தித்து மனுக்களை அளிக்கலாம் என கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.× RELATED ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆசிரியர்கள் இடமாறுதல் ஜூலை 8ல் துவக்கம்