கூடல்புதூர் காவல் நிலைய புதிய கட்டிடம் திறப்பு விழா

மதுரை, ஜன. 11: மதுரை கூடல்புதூர் காவல்நிலையத்தின் புதிய கட்டிடத்தை போலீஸ் கமிஷனர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.  

 மதுரை நகரில் 23 காவல்நிலையங்கள் உள்ளன. இதில் எஸ்.எஸ்.காலனி, கூடல்புதூர் உள்ளிட்ட சில காவல்நிலையங்கள் இன்னும் வாடகை கட்டிடங்களில் உள்ளது. இந்நிலையில் கடந்த வருடம் கூடல்புதூர் காவல்நிலையம் புதிய கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டு, மதுரை ஆனையூர் முத்தமிழ்நகரில் கட்டிடம் கட்டப்பட்டது. இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதில் போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் குத்துவிளக்கு ஏற்றி, துவக்கினார். நிகழ்ச்சியில் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள் பலர் பங்கேற்றனர்.
Advertising
Advertising

Related Stories: