அரசு கல்லூரி மாணவர்கள் குடவறை கோயில்களுக்கு பயணம்

மேலூர், ஜன. 11: மேலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் பண்டைய வரலாறுகளை பற்றி அறிந்து கொள்ளும் வகையில் சமண படுகைகள் மற்றும் குடவறை கோயில்களுக்கு பயணம் செய்தனர். மேலூர் அரசு கலைக்கல்லூரியின் வரலாற்று துறை பேராசிரியர்கள் ஜெகநாதன், பாலாஜி, பேராசிரியை சித்ரா தலைமையில் 75 மாணவ, மாணவிகள் நேற்று மேலூர் அருகில் உள்ள அரிட்டாப்பட்டிக்கு கல்விச்சுற்றுலா வந்தனர். அரிட்டாப்பட்டியில் உள்ள சமண படுகைகள் மற்றும் பிராமி எழுத்துக்கள் குறித்து கேட்டறிந்தனர்.

தொடர்ந்து தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாண்டிய காலத்து குடவறை கோயில்களுக்கு சென்று பண்டைய வரலாறுகள் குறித்து தெரிந்து கொண்டனர். அரிட்டாப்பட்டி பறவை மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் சிவலிங்கம், அன்பரசு, செல்வராசு ஆகியோர் மாணவர்களை வரலாற்று பகுதிக்கு அழைத்துச் சென்று விளக்கிக் கூறினர். பின்னர் பாரம்பரிய உணவு வகைகள் அங்கேயே சமைக்கப்பட்டு அனைவருக்கும் பறிமாறப்பட்டது. அரிட்டாப்பட்டியின் தொல்லியல் சான்றுகள், அரிதான பறவைகள், நீர்நிலைகள் குறித்து ரவிச்சந்திரன் மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார்.ஆசிரியை வீட்டில் 21 பவுன் திருட்டுமதுரை, ஜன. 11: மதுரையில் ஆசிரியையின் வீட்டில் 21 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதே போல், அவரது வீட்டுக்கு எதிர் வீட்டில் 2 கிலோ வெள்ளி கொள்ளை போய் உள்ளது. இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertising
Advertising

அவனியாபுரம் ரிங்ரோடு பகுதியில் தனியார் குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் ஜெயசக்கரை. காண்டிராக்டராக உள்ளார். இவரது மனைவி, புதுக்கோட்டையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதனால் ஜெயசக்கரை புதுக்கோட்டையில் வசித்து குடும்பத்துடன் வருகிறார். விடுமுறைக்கு மதுரையில் உள்ள வீட்டுக்கு வந்து செல்வர்.இந்நிலையில் நேற்றிரவு மதுரையில் உள்ள வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவு, ஜன்னல் உடைக்கப்பட்டிருந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 21 பவுன் நகைகள் திருட்டு போய் இருந்தது. இதேபோல் எதிரே இருந்த மற்றொரு வீட்டில் 2 கிலோ வெள்ளி திருட்டு போய் இருந்தது. தகவலறிந்த அவனியாபுரம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: