ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.100 கோடியில் பதினைந்து கிராமங்களில் வளர்ச்சி பணிகள் கூடுதல் கலெக்டர் தகவல்

மதுரை, ஜன. 11: கூடுதல் கலெக்டர் அம்ரித் தெரிவித்ததாவது: மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்தில் மதுரையை தேர்ந்தெடுத்தது. அதே போன்று என்.ஆர்.யு.எம். திட்டத்தில் மதுரை, காஞ்சிபுரம், தஞ்சாவூர் ஆகிய மாநகரையொட்டிள்ள புறநகரில் ஒரு ஊராட்சியை தேர்வு செய்து, அங்கு ஸ்மார்ட் சிட்டியை போன்று வளர்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது.மதுரை மாநகர் அருகே உள்ள கோவில்பாப்பாகுடி ஊராட்சி இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு ரூ.100 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக ஊரக வளர்ச்சித்துறை, மகளிர் திட்ட மேம்பாடு, விவசாய பொறியாளர்துறை, தோட்டக்கலைத்துறை, கல்வித்துறை, ஒருங்கிணைந்த ஊட்டசத்துதுறை மற்றும் ஆவின் ஆகிய அரசு துறைகள் சார்பில் வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஊராட்சியை சுற்றியுள்ள 15 கிராமப்பகுதிகளில் இந்த திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்றார்.

Related Stories: