பொங்கல் விழாவை சிறப்பித்த சேவல் சண்டை மன உளைச்சலை போக்க மதுரை போலீசாருக்கு பயிற்சி • 150 பேர் பங்கேற்பு • அனைவருக்கும் வழங்க வேண்டுகோள்

மதுரை, ஜன. 11: மன உளைச்சலைப் போக்கும் வகையில் மதுரை போலீசாருக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 150 பேர் பயிற்சி பெற்றுள்ள நிலையில், இதனை அனைத்து போலீசாருக்கும் விரிவுபடுத்த கோரிக்கை எழுந்துள்ளது.காவல்துறையில் பணியாற்றும் போலீசாருக்கு தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மனஅழுத்தம் போக்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மதுரையில் நகர் மற்றும் புறநகர் பகுதியில் இருக்கும் போலீசாருக்கு தனித் தனியாக இதற்கென பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 150 போலீசாருக்கு இப்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. பணிச் சுமையிலும், மது போதை, புகைபிடித்தல் பழக்கத்திற்கு ஆட்பட்டும், பிற மன உளைச்சலில் இருந்த போலீசார் கண்டறியப்பட்டனர்.

இவர்களுக்கு போலீஸ் அதிகாரிகள், வாரம் 2 நாட்கள் சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்கின்றனர். இந்த பயிற்சியினால், விருப்ப ஓய்வு எண்ணத்திலிருந்த பலரும் தங்கள் திட்டத்தை கைவிட்டு மீண்டும் தொடர்ந்து பணியாற்ற முடிவு செய்திருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவர்களை கமிஷனர், எஸ்பி, தனித்தனியாக அழைத்து ஊக்கம் அளித்துள்ளனர். மன உளைச்சல் போக்கும் பயிற்சி பெற்ற போலீசார் கூறும்போது, ‘‘பெங்களூர் சென்று, அங்கு மதுரை போலீஸ் அதிகாரிகள் மன உளைச்சலை போக்க சிறப்பு பயிற்சி மற்றும் யோகா கற்று திரும்பினர். அவர்கள் அங்கு பெற்ற பயிற்சியை தற்போது மாவட்டத்தில் உள்ள மற்ற போலீசாருக்கு வாரம் தோறும் பயிற்றுவித்து வருகின்றனர். இப்பயிற்சி உற்சாகமும், காவல்பணியை தொடர்ந்து சிறப்புடன் நிறைவேற்றும் மன வலிமையையும் தருகிறது. ஒரு பகுதியினர் என்றில்லாமல் அனைத்து போலீசாருக்கும் இந்த மனவலிமைப்பயிற்சி வழங்கும் வகையில் இதனை விரிவுபடுத்த வேண்டும்’’ என்றனர்.பயிற்சியாளர்களான போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘‘மதுபோதை, மன உளைச்சலில் ஈடுபடும் போலீசாருக்கு முதல் கட்டமாக 150 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. முதலில் பயிற்சிக்கு வர மறுத்தவர்கள் பயிற்சி முடிவில் மீண்டும் ஒரு வாரம் பயிற்சி கொடுங்கள் என்று கேட்கும் அளவிற்கு ஆர்வத்தை பயிற்சி கொடுத்திருக்கிறது. இப்பயிற்சிக்கு பின்னர் பல போலீசாரிடம் நல்ல மாற்றம் கிடைத்துள்ளது’’ என்றார்.

இறகு பந்து மைதானம்!

போலீசாருக்கு வழங்கப்பட்டு வரும் மன அழுத்தம் தீர்ப்பதற்கான பயிற்சியின் ஒரு கட்டமாக போலீசார் ஓய்வு நேரங்களில் விளையாடும் வகையில், இறகு பந்து மைதானம் நேற்று மதுரை ஆயுதப்படை வளாகத்தில் திறக்கப்பட்டது. எஸ்பி, மணிவண்ணன் நேற்று இதனைத் திறந்து வைத்தார். கூடுதல் எஸ்.பி.கள் நரசிம்மவர்மன், வனிதா மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: