ரூ.1000 பெறுவதை முறைப்படுத்த மாறுகிறது சர்வர் பொதுமக்கள் பதைபதைப்பு

திண்டுக்கல், ஜன. 11: கோர்ட் உத்தரவினை தொடர்ந்து குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் ரூ.ஆயிரம் பெற முடியும் வகையில் இணையதளத்தில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. தாமதித்தால் பணத்தை பெற முடியாது என்ற எண்ணத்தில் பலரும் மொய்ப்பதால் ரேஷன்கடைகளில் நெரிசலும், சர்ச்சையுமான நிலை தொடர்கிறது.இந்த ஆண்டு ரேஷன் கடைகளில் பொங்கலுக்கு வழக்கமான பரிசு பொருட்களுடன் ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் அனைத்து கார்டுகளுக்கும் வழங்கப்பட்டது. தற்போது கோர்ட் உத்தரவுப்படி இது வரைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் எப்பொருளும் வாங்காத வசதிபடைத்தவர்கள் இதனை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஆரம்பத்திலே பலரும் வாங்கி சென்று விட்டனர்.

Advertising
Advertising

இதனால் கோர்ட் உத்தரவு பல கார்டுதாரர்களையும் கலவரப்படுத்தி உள்ளது. இந்நிலையில் சர்க்கரை விருப்ப கார்டுகள் மற்றும் நன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்க இயலாது என்பதால் சென்னையில் உள்ள சர்வர் மூலம் வெப்சைட்டில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. எனவே அனைத்து விற்பனையாளர்களும் தங்களில் உள்ள பிஓஎஸ்.(பாய்ண்ட் ஆப் சேல்ஸ்) மிஷினை ஆப் செய்து பின்பு இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்ற நிலையினால் இவற்றை குறுகிய காலத்திலே பெற்று விட வேண்டும் என்று பலரும் முனைப்பு காட்டுகின்றனர். இதனால் காலையிலே கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். மாலை வரை இந்நிலை தொடர்கிறது. நேற்று திண்டுக்கல் அருகே பாலகிருஷ்ணாபுரத்தில் வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தனர். இதேபோல் செட்டிநாயக்கன்பட்டி மின்வாரிய காலனி பகுதி நேர கடையிலும் பொதுமக்கள் மொய்த்தனர். ஆயிரம் ரூபாயை பெறுவதில் தாமதமும், குளறுபடியும் ஏற்பட்டதால் திடீர் முற்றுகையில் ஈடுபட்டனர்.ஆயிரம் ரூபாய் என்பதால் பலரும் தங்களின் அன்றாட நிகழ்வில் இருந்து ஒதுங்கி இவற்றை பெற்றே தீர வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகின்றனர். இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள கடைகளில் நெரிசலும், சர்ச்சையும் ஏற்பட்டு வருகிறது.

Related Stories: