கொடைக்கானல் விதிமீறல் கட்டிடங்கள் வழக்கு அரசு நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை, ஜன. 11: கொடைக்கானல் விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பாக அரசு தரப்பில் ேமற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.கொடைக்கானலை சேர்ந்த பலர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கொடைக்கானலில் 5 ஆண்டுக்கு ஒருமுறை மாஸ்டர் பிளானை மாற்ற வேண்டும். கடந்த 1993ம் ஆண்டிற்கான மாஸ்டர் பிளான் இதுவரை மாற்றப்படவில்லை. கடந்த 198488ம் ஆண்டின் மக்கள் தொகை, சுற்றுலாப்பயணிகள் வருகை அடிப்படையில் அந்த மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டது. 1999ல் தயாரிக்கப்பட்ட புதிய மாஸ்டர் பிளானுக்கு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. தற்போது சுற்றுலாப்பயணிகள் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கேற்ப அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது அவசியம். ஆனால், விதிகளை மீறி கட்டிடம் கட்டியுள்ளதாக கூறி நோட்டீஸ் அனுப்புவது, சீல் வைப்பது போன்ற பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். எனவே, புதிய மாஸ்டர் பிளான் அமலாகும் வரை நோட்டீஸ் அனுப்பவும், சீல் வைக்கவும் தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுக்களில் கூறியிருந்தனர்.

இந்த மனுக்கள் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, கொடைக்கானலுக்கான புதிய மாஸ்டர் பிளான் திட்டம் 3 மாதத்தில் இறுதி செய்யப்படும். இதன்படி, விதிமீறல் மற்றும் அனுமதியற்ற கட்டிடங்கள் மீது நடவடிக்ைக எடுக்கப்படும் என கூறப்பட்டிருந்

தது.இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் 108 விதிமீறல் கட்டிடங்களுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அப்ேபாது மனுதாரர் ஒருவர் தரப்பில் கொடைக்கானலில் உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் விதிமீறலில் உள்ளதாக கூறி அதற்கான போட்டோக்கள் மற்றும் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.இதையடுத்து, அரசுத் தரப்பில் மேற்ெகாள்ளப்பட்ட நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளி வைத்தனர்.

Related Stories: