ஒட்டன்சத்திரம் பஸ்ஸ்டாண்டில் பிக்பாக்கெட் அதிகரிப்பு பயணிகள் புலம்பல்

ஒட்டன்சத்திரம், ஜன. 11: ஒட்டன்சத்திரம் பஸ்நிலையத்தில் பிக்பாக்கெட் திருடர்கள் அதிகரிப்பால் பயணிகள் பணம், பொருட்களை பறிகொடுப்பது தொடர்கதையாக உள்ளது.ஒட்டன்சத்திரம் பஸ்நிலையம் பழநி, திண்டுக்கல், திருச்சி, மதுரை, தேனி, கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மற்ற வெளியூர் பஸ்களும் இங்கு வந்து செல்கின்றன. மேலும் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கு வரும் வியாபாரிகள், விவசாயிகள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் முக்கிய பஸ்நிலையமாக உள்ளது. தற்போது பழநி தைப்பூச பக்தர்கள் வருகையும் அதிகரித்துள்ளது. இதனால் பஸ்நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது.

இந்நிலையில் பஸ்நிலையத்தில் கூட்டநெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் திருடர்கள் அதிகரித்துள்ளனர். இவர்கள் பஸ்சுக்காக காத்திருக்கும் முதியோர், தனியாக நிற்கும் பெண்களை குறி வைத்து பணம், நகை, பொருட்களை திருடி செல்கின்றனர்.

ஒட்டன்சத்திரம் பஸ்நிலையம் அருகேதான் டிஎஸ்பி அலுவலகம், போக்குவரத்து காவலர் அலுவலகம் உள்ளிட்டவை இருந்தாலும் தினமும் 10க்கும் மேற்பட்டோர் பணம், பொருட்களை பறிகொடுத்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பொங்கல், தைப்பூசம் என அடுத்தடுத்து பண்டிகை காலம் வருவதால் ஒட்டன்சத்திரம் பஸ்நிலையத்தில் கூடுதல் போலீசார் நியமித்து ரோந்து பணியை அதிகரிக்க வேண்டுமென சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: