200 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

சின்னசேலம், ஜன. 11: சின்னசேலம் பேரூராட்சி பகுதிகளில், அரசால் தடை செய்யப்பட்ட 200 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக அரசால் மண் வளம் பாதுகாக்கும் பொருட்டு பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அதை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இதையடுத்து சின்னசேலம் பேரூராட்சிக்கு உட்பட்ட கடைவீதி மற்றும் சேலம் மெயின்ரோடு பகுதிகளில் செயல் அலுவலர் மாதேஸ்வரன், துப்புரவு மேற்பார்வையாளர் முத்துகுமார், தலைமை எழுத்தர் விழிச்செல்வம் உள்ளிட்டோர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பழக்கடைகள் மற்றும் கடைகளில் வியாபாரிகள் பயன்படுத்திய பிளாஸ்டிக் பைகள், தட்டுகள் உள்ளிட்ட 200 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அரசால் தடை செய்யப்பட்ட, மக்காத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள், வியாபாரிகளிடம் எடுத்து கூறினர். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் மனித இனத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் அடங்கிய துண்டுபிரசுரங்களை பொதுமக்கள், வியாபாரிகளிடம் வழங்கினர். இதில் பதிவறை எழுத்தர் சரவணன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் முத்துவேல், சுரேஷ் உள்ளிட்ட துப்புரவு பணியாளர்கள் உடனிருந்தனர்.

× RELATED ஜெயங்கொண்டம் நகராட்சியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்