குஜிலியம்பாறையில் போலீஸ் குடியிருப்பு பணி மும்முரம்

குஜிலியம்பாறை, ஜன. 11: குஜிலியம்பாறையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் ஸ்டேஷன் எதிரே போலீஸ் குடியிருப்புகள் கட்டப்பட்டன. போதிய பராமரிப்பில்லாமல் கடந்த 2005ம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்த இக்குடியிருப்புகள் தற்போது இடிந்து புதர்மண்டி கிடக்கின்றன. இந்நிலையில் இங்கு ஒரு எஸ்ஐ, 14 காவலர் குடியிருப்பு என 15 வீடுகள் கட்டுவதற்கு தமிழ்நாடு வீட்டுவசதி கழகம் சார்பில் ரூ.203.19 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.இதற்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பழைய கட்டிடம் முற்றிலுமாக இடிக்கப்பட்டது. தற்போது கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் டிசம்பர் மாதம் பணிகள் நிறைவடைந்து புதிய போலீஸ் குடியிருப்பு பயன்பாட்டிற்கு வரும்.

Advertising
Advertising

\

Related Stories: